Skip to main content

முதல் 2 போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாட மாட்டார்- ராகுல் டிராவி

Aug 29, 2023 47 views Posted By : YarlSri TV
Image

முதல் 2 போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாட மாட்டார்- ராகுல் டிராவி 

ஆசிய தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் நாளை மோதுகின்றன. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2-ந் தேதி இலங்கையில் நடக்கிறது.



இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.



இந்த போட்டி 2-ந் தேதி இலங்கையில் நடக்கிறது. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த உலகக்கோப்பை தொடருக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஆசிய அணிகள் இந்த ஆசிய கோப்பை தொடரை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளும். இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான முதல் 2 போட்டியில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-



கேஎல் ராகுல் மிகவும் நன்றாக முன்னேறி வருகிறார். ஆனால் ஆசிய கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளான பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு எதிராக அவர் விளையாடமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.



 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை