Skip to main content

இயற்கையான இளநீரை நடிகர் விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைத்தார்!

Oct 19, 2020 210 views Posted By : YarlSri TV
Image

இயற்கையான இளநீரை நடிகர் விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைத்தார்! 

இயற்கையான முறையில் இளநீரை பாதுகாத்து அளிக்கும் வகையில், செளக்கியா நிறுவனம் புதிய முறையில் இளநீரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த இளநீரை நடிகர் விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைத்தார்.



இளநீரை நீண்ட நாட்கள் பாதுகாக்கும் வகையில், மேற்தோள் உரிக்கப்பட்டு,அதை பாதுகாப்பாக பேக்கிங் செய்து, விற்பனைக்கு வந்துள்ளது. இளநீரை எளிதாக குடிக்கும் வகையில் , பிரத்யேக மூடி போன்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.



தள்ளுவண்டி மற்றும் வீதி ஓரங்களில் கிடைக்கும் இளநீரை விட கூடுதல் சுவை மற்றும் பருமனான காய்களை தேர்வு செய்து உருவாக்கியுள்ளது. இந்த இளநீர், தற்போது பரவலாக சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.



இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் இளநீரை, அதே சுவை, அதே தரத்துடன் தருவதற்கான புதிய முயற்சி என குறிப்பிட்டுள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கெனவே தரமான மாட்டுப்பால், தேங்காய் எண்ணெய், துருவிய தேங்காய் உள்ளிட்ட பொருட்களை சந்தைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை