Skip to main content

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான 4 வது நாள் பரிசீலனை நிறைவு!

Oct 05, 2020 254 views Posted By : YarlSri TV
Image

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான 4 வது நாள் பரிசீலனை நிறைவு! 

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான 4 வது நாள் பரிசீலனை நிறைவுக்கு வந்துள்ளது.



இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



20 வது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று நான்காவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



இந்த மனுக்கள் மீதான சமர்ப்பிப்பு அனைத்தும் கடந்த வெள்ளிக்கிழமைக்குள் முடிவடைய இருந்தாலும், மேலதிக சமர்ப்பிப்புகளை முன்வைக்க சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.



அதன்படி இன்று திங்கட்கிழமை அவர் மேலதிக சமர்ப்பிப்புகளை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை