Skip to main content

இஸ்ரேலுடன் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் ஜெருசலேமில் தங்கள் நாட்டு தூதரகங்களை திறக்க செர்பியா மற்றும் கொசோவோ நாடுகள் முடிவு!

Sep 06, 2020 241 views Posted By : YarlSri TV
Image

இஸ்ரேலுடன் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் ஜெருசலேமில் தங்கள் நாட்டு தூதரகங்களை திறக்க செர்பியா மற்றும் கொசோவோ நாடுகள் முடிவு! 

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. 1967 ஆம் ஆண்டு அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. மேலும், ஜெருசலேத்தின் கிழக்கு பதியை இஸ்ரேல் கைப்பற்றியது. 



ஒருங்கிணைந்த ஜெருசலேத்தின் அனைத்து பகுதிகளும் இஸ்ரேல் சொந்தமானது என தெரிவித்துள்ளது. ஆனால் ஜெருசலேத்தின் அனைத்து பகுதிகளும் தங்களுக்குத்தான் சொந்தம் என பாலஸ்தீனமும் தெரிவித்தது.



இதனால், ஜெருசலேம் எந்த நாட்டின் தலைநகர் என்பதில் பல பிரச்சனைகள் நிலவி வந்தது. ஆனால், ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. உலக நாடுகள் அதை அங்கீகரிக்க வேண்டும் என தெரிவித்து வருகிறது.



ஆனால், உலகின் பல நாடுகள் தங்கள் நாட்டு தூதரகத்தை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தான் அமைத்துள்ளது. ஆனால், இஸ்ரேல் அரசோ உலக நாடுகள் தங்கள் தூதரகங்களை டெல் அவிவ் நகரில் இருந்து இஸ்ரேல் நகருக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தது.



இதற்கிடையில், கடந்த 2017 ஆம் ஆண்டு உலகின் முதல் நாடாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் தான் என அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியது. மேலும், தங்கள் நாட்டின் தூதரகத்தை டெல் அவிவில் இருந்து இஸ்ரேல் நகருக்கு அமெரிக்கா மாற்றி அமைத்து.



அமெரிக்காவை தொடர்ந்து குவாத்தமாலா நாடு கடந்த 2018 ஆம் ஆண்டு தனது தூதரகத்தை ஜெருசலேமில் திறந்தது. அதன் பின் எந்த ஒரு நாடும் இஸ்ரேல் நாட்டில் உள்ள தங்கள் தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேமிற்கு மாற்றியமைக்கவில்லை.



இதற்கிடையில், செர்பியா நாட்டின் ஒரு அங்கமாக இருந்த பகுதி கொசோவோ. ஆனால், 2008 ஆம் ஆண்டு செர்பியாவிடம் இருந்து பிரிந்து கொசோவோ தனி நாடாகவும், தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.



ஆனால், கொசோவோ-வை தனிநாடாக செர்பியா அங்கீகரிக்காமல் இருந்தது. 



தற்போது அமெரிக்க அதிபரின் முயற்சியால் செர்பியா-கொசோவோ இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் பொருளாதார ரீதியிலான பரஸ்பர நடவடிக்கைகளுக்கு சம்பதம் தெரிவித்துள்ளன.



இதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. கொசோவோ பிரதமர் அவ்துல்லா ஹோதி மற்றும் செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக் இடையே இரு நாடுகளுக்கான பொருளாதார ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 



இந்த ஒப்பந்தத்தின்போது இரு நாடுகளும் இஸ்ரேலுடன் நல்லுறவை வலுப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கொசோவோ முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடாகும். இஸ்ரேல்-கொசோவோ இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தனி நாடாக அங்கிகரிக்காமல் இருந்து வந்தது.



ஆனால், தற்போதைய உடன்படிக்கையின் படி, இஸ்ரேல் நாட்டை கொசோவோவும், கொசோவோவை இஸ்ரேலும் தனித்தனி நாடுகளாக அங்கீகரித்துள்ளன. 



இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கொசோவோ தனிநாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் அதை அங்கீகரித்த முதல் நாடு துருக்கி ஆகும். 



தற்போதுவரை துருக்கி-இஸ்ரேல் இடையே மிகவும் மோசமான உறவு இருந்து வருகிறது. மேலும், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்ததற்கும், தனது தூதரகத்தை டெல் அவிவ்வில் இருந்து ஜெருசலேமிற்கு கொசோவோ மாற்றியமைப்பதற்கும் துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது.



அதேபோல், செர்பியாவும் தனது தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேமிற்கு மாற்ற உள்ளது. இந்த மாற்றம் ஏற்படும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகளில் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக



அங்கீகரிக்கும் முதல் நாடு செர்பியாவாகத்தான் இருக்கும்.



எனென்றால் ஐரோப்பிய நாடுகள் எதுவும் ஜெருசலேமை இஸ்ரேலில் தலைநகராக இதுவரை அங்கீகரிக்கவில்லை. மேலும், தங்கள் நாட்டு தூதரகங்களை ஜெருசலேமில் அமைக்கவும் இல்லை.



இந்நிலையில், செர்பியா, கொசோவோ நாடுகள் தங்கள் தூதரகங்களை டெல் அவிவில் இருந்து ஜெருசலேமிற்கு மாற்றுவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த நிகழ்வு ஏற்பட காரணமாக இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை