Skip to main content

அகில இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கை....!

Jun 03, 2020 277 views Posted By : YarlSri TV
Image

அகில இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கை....! 

இனிவரும் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் மாடுகள் நோய்த்தொற்றில்லாது   தரமான மாடுகளையும்,நல்ல பால் உற்பத்தியை தரக்கூடிய மாடுகளை மட்டுமே அரசாங்கம் இறக்குமதி செய்ய வேண்டுமென   



அகில இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க உப செயலாளரும்  மருதங்கேணி கால்நடை  வைத்திய அதிகாரியுமான  ச.சுகிர்தன்தெரிவித்துள்ளார்



 இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து பால் உற்பத்தி தொடர்பில்தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



கடந்த முறை அரசாங்கம் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அரசினால் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாடுகள் சிறந்தவையாக இல்லை என்றும் அவை சில நோய்களை இலங்கைக்கு கொண்டுவந்தன இதனால், அந்த திட்டம் செயலிழந்து காணப்படுகின்றது



அந்த விடயங்கள் தொடர்பாக  அரசாங்கத்திடம் எழுத்து மூலம் கொடுக்கப்பட்டுள்ளது,



இனிவரும் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் மாடுகள் அவ்வாறு இல்லாது தரமானதாகவும் நோய் இல்லாத மாடுகளையும்,நல்ல பால் உற்பத்தியை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்  



இலங்கையில் 3.2 மில்லியன் லீற்ரர் பால் தேவைப்படுவதாகவும் ஆனால் தற்போது 1.2 மில்லியன் லீற்றர் பாலே உற்பத்தியாவதாகவும்,மிகுதி இரண்டு மில்லியன் லிட்டர் பாலுக்குமான கொள்வனவு செலவு அதிகமாக உள்ளது அந்த பணம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கே செல்கிறது,இந்த திட்டம் வெளிநாட்டுக்கு காசு செல்வதை குறைப்பதற்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது 



தற்போது மீண்டும் கடந்த மாதம் 26 ம் திகதி அமைச்சரவை பத்திரம் மூலம் பால் மாடு இறக்குமதி மட்டுமின்றி பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது



கடந்தமுறை ஏற்பட்டது போன்று இனி மேலும் எந்த தவறும்  நடைபெற அரசு இடமளிக்க கூடாது என்றும் குறித்த பால் மாடு இறக்குமதி தொடர்பில் இலங்கை கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் அகில இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க உப செயலாளரும்  மருதங்கேணி கால்நடை  வைத்திய அதிகாரியுமான  ச.சுகிர்தன் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை