Skip to main content

தேசத்துரோகத்தில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை! வெளியான பரபரப்பு தகவல்

Mar 07, 2022 175 views Posted By : YarlSri TV
Image

தேசத்துரோகத்தில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை! வெளியான பரபரப்பு தகவல் 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்கின்றது.



உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த போரில் இரு தரப்பிலும் பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



உக்ரைன் -ரஷ்யா இடையேயான பேச்சில் பங்கேற்ற அதிகாரி படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளன.



கடந்த மாதம் 28 ஆம் திகதி மற்றும் கடந்த 3ஆம் திகதி என 2 கட்டங்களாக இரு நாடுகளுக்கு இடையில் சமரச பேச்சுவார்த்தை இடம்பெற்ற நிலையில்,3வது கட்ட பேச்சுவார்த்தை வரும் திங்கள் கிழமை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



இந்த நிலையில் ரஷ்யாவுடனான சமரச பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.



டெனிஸ் கிரீவ் என்கிற அந்த அதிகாரி தலைநகர் கீவில் குண்டு காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.



இதன் பின்னணி இப்போது தெரியவந்துள்ளது. இவர் தேசத்துரோகத்தில் ஈடுபட்டதால் தான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் எம்.பி. அலெக்சாண்டர் டுபின்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.



டெனிஸ் கிரீவின் தேசத்துரோகம் குறித்து உக்ரைனின் பாதுகாப்பு சேவை அமைப்புக்கு தெளிவான தகவல்கள் கிடைத்து இருப்பதாகவும் மற்றொரு எம்.பி.யான ஒலெக்சி ஹோன்சரெங்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை