Skip to main content

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது!

Nov 07, 2020 259 views Posted By : YarlSri TV
Image

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது! 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கி 34 நாட்கள் ஆகும் நிலையில் இதுவரை 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ளனர். கோபம், வெறுப்பு, அன்பு, காதல் என பலதரப்பட்ட முகங்களை பிக்பாஸில் காணமுடிகிறது.



நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டின் தலைவராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டார் . ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு கிழமைகளில் கமலின் விஜயம் இருக்கும் .அதன்படி இந்த வாரம் முழுவதும் நடந்த பஞ்சாயத்துக்கள், சண்டைகள் ,பாராட்டுகளை கமல் வெளிப்படையாகவும், ஆணித் தரமாகவும் சொல்வது வழக்கம்,



இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோவில் கமல் ஹாசனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. முதலில் பிக்பாஸ் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ட்ரீட் கேட்கிறார். அதற்கு கமல் நான் எல்லோரையும் சமமாகவும், மரியாதையுடனும் நடத்துகிறேன். அதுதான் என் ட்ரீட் என்று வழக்கம்போல் பதிலளிக்கிறார். பின்னர் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறுகின்றனர். அப்போது கமல் ஹாசன் அடிக்கடி அனைவரும் ஐ லவ் யு என்று என்னிடம் சொல்கிறீர்கள். ஐ லவ் யூ ஆல்; நினைவு வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறும்படியாக ப்ரோமோ முடிகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை