Skip to main content

தலிபான்களுடன் சீனாவுக்கு பிரச்சினைகள் உள்ளன- ஜோ பைடன் சொல்கிறார்...

Sep 09, 2021 120 views Posted By : YarlSri TV
Image

தலிபான்களுடன் சீனாவுக்கு பிரச்சினைகள் உள்ளன- ஜோ பைடன் சொல்கிறார்... 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் அந்த நாடு முழுவதுமாக தலிபான்கள் வசமானது. இதைத்தொடர்ந்து தலிபான்கள் தற்போது தங்களது இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். முன்னதாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் முதல் நாடாக அவர்களுக்கு சீனா தனது ஆதரவைத் தெரிவித்தது. அதேபோல் தலிபான்களும் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர்.



இந்தநிலையில் தலிபான்களுடன் சீனாவுக்கு உண்மையான சில பிரச்சினைகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.



வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தலிபான்களுக்கு சீனா நிதியுதவி செய்வது அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானதா என ஜோ பைடனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.



அதற்கு பதிலளித்த ஜோ பைடன் "தலிபான்களிடம் சீனாவுக்கு உண்மையான சில பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை சரி செய்ய சீனா சில ஏற்பாடுகளை செய்ய முயன்று வருவதை உறுதியுடன் கூற முடியும்" என கூறினார்.



மேலும் அவர் சீனாவை தவிர பாகிஸ்தான், ரஷியா மற்றும் ஈரான் போன்ற அண்டை நாடுகள் தலிபான்களுடன் இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை