Skip to main content

சீனாவிற்கு இலங்கை அரசு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகிறது – சிறிதரன்

Jun 30, 2021 165 views Posted By : YarlSri TV
Image

சீனாவிற்கு இலங்கை அரசு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகிறது – சிறிதரன் 

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது அதற்கு இலங்கை முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் சீனாவின் கடல் அட்டை பண்ணை பார்வையிடுவதற்கு இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் விஜயமொன்றை மேற் கொண்டிருந்தார். அதன்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவிக்கையில் அன்மைய நாட்களிலே சர்வதேச ரீதியாக பேசப்படும் ஓர் விடயமாக இலங்கையினுடைய தென் பகுதியிலே சீனாவின் உடைய அகலக் கால்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடக்கு பகுதியில் குறிப்பாக நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவுகளில் ஆதிக்கத்தை செலுத்தியுள்ள நிலையில் தற்பொழுது யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடலட்டை குஞ்சுகளை வளர்ப்பதாக கூறி உருவாக்கப்பட்ட அட்டை பண்ணை ஆனது தற்போது கிளிநொச்சியின் கௌதாரிமுனை என்னும் இடத்தில் எந்த அனுமதியும் இன்றி அந்த அட்டை பண்ணையை செய்து வருகின்றார்கள்.



அத்துடன் யாழ் பாசையூர் மீனவர்கள் கிளிநொச்சி கௌதாரிமுனை மீனவர்கள் கடலட்டை வளர்ப்பிற்கான முன் வைத்த உரிமங்கள் மறுக்கப்பட்ட நிலையில் இப்பொழுது சீனர்கள் செய்து வருவதுடன் இயற்கையாகவே இக்கடலில் வளர்கின்ற கடல் அட்டைகளை நிராகரித்து செயற்கையாக பிரோய்லர் கோழிகளுக்கு வைக்கும் மருந்துகளை போல் கடலட்டைகளுக்கு வைத்து விரைவான வளர்ச்சியை அடைய வைத்து அதனை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் சீனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



இவற்றினை சாதாரணமாகப் பார்க்கும்போது சீனாவிற்கு கடல் அட்டை ஏற்றுமதி இடமாகத்தான் தெரியும் ஆனால் இதன் பின் பாரிய அளவு அரசியல் செயற்பாடுகள் உள்ளன.



அத்துடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குறித்த கடலட்டை பண்ணை தொடர்பாக சட்டரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை