Skip to main content

இங்கிலாந்தில் மேலும் 6 மாதத்துக்கு ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிப்பு!

Mar 27, 2021 185 views Posted By : YarlSri TV
Image

இங்கிலாந்தில் மேலும் 6 மாதத்துக்கு ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிப்பு! 

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் வரை அவசரகால அதிகாரங்களை நீட்டிப்பதற்கு ஆதரவாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்  ஒப்புதல் அளித்தது. மேலும், கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறைகளை படிப்படியாக தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தையும்  அவர்கள் அங்கீகரித்தனர்.



ஆனாலும், போரிஸ் ஜான்சனுக்கு தனது சொந்த கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த முடிவால் கிடைக்கும் நன்மைகளைவிட நாட்டின் பொருளாதாரம், ஜனநாயகம் மற்றும் மனித செலவுகள் அதிகமாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.



கொரோனா வைரஸ் அவசரகால விதிமுறைகள் கடந்த ஓராண்டுக்கு முன்னர் அமல்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் நாட்டில் ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்யவும், வணிகங்களை மூடவும், பயணத்தைக் கட்டுப்படுத்தவும், வைரசால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை