Skip to main content

பணக்கார வேட்பாளர்’ வாயை பிளக்க வைக்கும் சொத்து விவரம்!

Mar 17, 2021 194 views Posted By : YarlSri TV
Image

பணக்கார வேட்பாளர்’ வாயை பிளக்க வைக்கும் சொத்து விவரம்! 

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒன்று 2021 சட்டசபை தேர்தல். ஆளும் அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேபோல் திமுக 173 தொகுதிகளில் களம் காண்கிறது. ஆளும் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் நிலையில், திமுக விட்ட இடத்தை பிடித்துவிட வேண்டும் என போராடி வருகிறது. இந்த சூழலில் தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். இதில் சொத்து மதிப்பு, குற்ற பின்னணியை அவர்கள் குறிப்பிடுவது வழக்கம்.



இந்நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் இசக்கி சுப்பையாவின் சொத்து விவரம் நம்மை மலைக்க வைத்துள்ளது. இசக்கி சுப்பையாவின் அசையும் சொத்து ரூ.3.79 கோடி, அவரது மனைவி மீனாட்சியின் பெயரில் சுமார் ரூ. 3.06 கோடி சொத்து உள்ளது. அதன்படி மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.6 .86 கோடியாகும். அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.208.96 கோடி, அதேபோல் அவரின் மனைவியின் பெயரில் ரூ.30.03 கோடி சொத்துக்கள் உள்ளன. அதன்படி இசக்கி சுப்பையாவுக்கு இருக்கும் மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.246.76 கோடியாம். கடந்த 2011 ஆம் ஆண்டு ரூ.60.02 கோடியாக இருந்த சொத்து 10 ஆண்டுகளில் 4 மடங்கு உயர்ந்துள்ளது கண்களை விரிய செய்துள்ளது.



கமல்ஹாசனின் சொத்து மதிப்பான ரூ.176கோடி மற்றும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மகேந்திரன் சொத்து மதிப்பு ரூ.160 கோடியாகும். இவர்கள் இருவருமே அதிக சொத்துக்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலில் முதல் 5 இடத்தில் உள்ளனர். அதேபோல் சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்எல்ஏ எம்.கே. மோகன் சொத்து மதிப்பு ரூ. 211 கோடி என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை