Skip to main content

சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியை நல்லாட்சி என்று பிரதமர் மோடி பாராட்டு!

Sep 14, 2020 293 views Posted By : YarlSri TV
Image

சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியை நல்லாட்சி என்று பிரதமர் மோடி பாராட்டு! 

நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிற பீகாரில் வரும் அக்டோபர்-நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் இந்த கூட்டணி களம் இறங்குகிறது



இந்த தருணத்தில் அங்கு ரூ.900 கோடி மதிப்பில் 3 பெட்ரோலிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.



பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தவாறு நேற்று அந்த திட்டங்களை காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்து பேசினார்.



அப்போது அவர் பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் நல்லாட்சி நடந்து வருவதாக பாராட்டினார்.



அதே நேரத்தில் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ், அவரது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் பெயரைக் குறிப்பிடாமல் மாநிலங்களின் பின்தங்கிய நிலைக்கு காரணம் என கடுமையாக சாடி குட்டு வைத்தார்.



தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:-



பீகார் மாநிலம், நீண்ட காலமாகவே ஒரு விசித்திரத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. சாலை திட்டங்கள் முடங்கின. கால்நடையாக நடந்து செல்வோருக்கும், வாகனங்கள் இல்லாதோருக்கும் இவர்கள் என்ன தரப்போகிறார்கள் என்று மக்கள் கேள்வி கேட்டனர்.



முன்னேற்றத்துக்கான இத்தகைய அலட்சியம், உயர் கல்வியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை