Skip to main content

கொரோனா பற்றி புதிய தகவல்கள்: சர்வதேச நிபுணர் குழு கண்டுபிடிப்பு

Feb 06, 2021 196 views Posted By : YarlSri TV
Image

கொரோனா பற்றி புதிய தகவல்கள்: சர்வதேச நிபுணர் குழு கண்டுபிடிப்பு 

கொவிட்–19 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்டது என்பதற்கு இதுவரை எந்தவித ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு வழிநடத்தும் ஆய்வுக் குழு கூறியுள்ளது.



கொரோனா வைரஸ் எவ்வாறு உருவானது என்பதை ஆராய அந்தக் குழு சீனாவின் வூஹான் நகருக்குச் சென்றுள்ளது. அந்த வைரஸ் வௌவால் குகைகளிலிருந்து வந்ததா என்பதைக் கண்டறிய மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகக் கூறினார் குழுவின் விலங்கியல் நிபுணரும் விலங்குநல வல்லுநருமான பீட்டர் டஸ்ஸாக்.



வைரஸ் பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். “நாம் இந்த வைரஸ் பற்றி புதிய தகவல்களை பெற்றுள்ளோம். இந்த வைரஸ் பற்றி சரியான திசையில் செல்ல அந்த விடயம் தீர்க்கமானதாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.



டஸ்ஸாக் 2002ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் நோயின் பின்னணியை ஆராய்ந்த மருத்துவக் குழுவில் பணியாற்றியவர்.



யுனான் மாகாணத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குகைகளில் வாழும் வௌவால்களிடம் இருந்து சார்ஸ் நோயை உண்டாக்கிய வைரஸ் பரவியதாகக் கண்டறியப்பட்டது.



இந்நிலையில் கொவிட்–19 தொற்று எங்கிருந்து தோன்றியது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த வைரஸின் புதிய மரபணு மாற்றங்கள் காரணமாக அது நிலைத்திருக்கும் என்று டஸ்ஸாக் தெரிவித்தார்.



“மனிதனிடம் தாவி பெருந்தொற்றாக மாறி வைரஸ் ஒன்றாக இது உள்ளது. இது எப்போது எம்மோடு இருக்கக் கூடும். ஆனால் அதனை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. தடுப்பு மருந்து ஒன்றை செயற்படுத்து புதிய திரிபு ஒன்றில் இருந்து தப்பிக்கும் வகையில் தடுப்பு மருந்தை புதுப்பிக்க வேண்டியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை