Skip to main content

தாறுமாறா புரட்டி எடுக்கும் கொரோனாவின் 3வது அலை;

Nov 08, 2020 267 views Posted By : YarlSri TV
Image

தாறுமாறா புரட்டி எடுக்கும் கொரோனாவின் 3வது அலை; 

தங்கள் மாநிலத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை மிக மோசமாக தாக்கியிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.






தலைநகர் டெல்லியில் நேற்று புதிதாக 6,953 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 79 பேர் பலியாகியுள்ளனர். இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. இதற்கு பண்டிகை நாட்கள் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் காற்று மாசுபாட்டால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.





டெல்லியில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 15 ஆயிரம் பேர் வரை கூட செல்லலாம். எனவே அதற்கேற்ப அரசு தயாராக வேண்டும் என்று தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், டெல்லி அரசு பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.



கடந்த வெள்ளி அன்று மட்டும் 2.65 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. டெல்லியில் கொரோனாவும், காற்று மாசுபாடும் பெரிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.





இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அவசர சிகிச்சை மையங்களில் படுக்கை வசதிகள் முழுவதுமாக நிரம்பிவிட்டன. கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசுகையில், டெல்லியில் கொரோனா பாதிப்பின் மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கிறது. இதன் எண்ணிக்கையை கருத்தில் எடுத்துக் கொண்டால், இதுவரை சந்தித்திராத மோசமான பாதிப்பு என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆனால் அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும் என்று கூறினார்.



Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை