Skip to main content

இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய கொண்டுவரப்பட்ட மீன்கள் பறிமுதல்!

Mar 12, 2021 193 views Posted By : YarlSri TV
Image

இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய கொண்டுவரப்பட்ட மீன்கள் பறிமுதல்! 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி முனையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த ஒரு வகையான மீன்கள் சுங்க பல்லுயிர் பிரிவின் அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



சுமார் 60 கிலோகிராம் எடையுள்ள இந்த மீன் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, இலங்கை ஏயர்லைன்ஸின் யுஎல் -503 என்ற விமானத்தின் மூலம் இங்கிலாந்தின் லண்டனுக்கு நேற்று காலை ஏற்றுமதி செய்ய, கட்டுநாயக்க விமான நிலைய பொருட்கள் ஏற்றுமதி முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது.



இதன்போதே சுங்க அதிகாரிகளினால் இந்த மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முறையான ஆய்வுகளுக்கு பின்னர் அது அழிக்கப்படவுள்ளது.



வித்தியாசமான, அதிக சுவை கொண்ட இந்த மீன்களுக்கு ஐரோப்பா உட்பட பல நாடுகளில் அதிக தேவை உள்ளது.



மீன்வள மற்றும் நீர்வள ஆதாரச் சட்டத்தின் கீழ், 11.04.2017 அன்று வெளியிடப்பட்ட அசாதாரண அரசிதழ் அறிவிப்பின் கீழ், இந்த மீன்களைப் பிடிப்பது, வைத்திருத்தல், போக்குவரத்து, கொள்முதல், விற்பனை, ஏற்றுமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை