Skip to main content

3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம்!

Jan 27, 2021 226 views Posted By : YarlSri TV
Image

3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம்! 

இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.



இந்த விடயம் தொடர்பாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.



மிகப்பெரிய உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைடன் ஒப்பிடும்போது தடுப்பூசியின் உற்பத்தி திறன் இன்னும் குறைவாக இருந்தாலும் நன்கொடை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சீனா தேசிய மருந்துக் குழு நிறுவனம் (சினோபார்ம்) தயாரிக்கும் இந்த தடுப்பூசியை பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு ஒப்படைக்க எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவிட் -19 தொற்று நோயைத் தடுப்பதில் 79-86வீத செயற்திறன், கடுமையான மற்றும் மிதமான நோய்களைத் தடுப்பதில் 100வீத செயற்திறன் கொண்ட சினோபார்ம் தடுப்பூசி பல நாடுகளில் ஏற்கனவே மூன்றாம் கட்ட சோதனைகளை கடந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது ஒரு செயலற்ற தடுப்பூசி என்பதால் அதை குளிர்சாதன பெட்டியில் (2-8 டிகிரி செல்சியஸ்) எளிதாக சேமித்து கொண்டுசெல்ல முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செர்பியா, எகிப்து, பஹ்ரைன், ஜோர்தான், ஈராக், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது என்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஜனவரி 26ஆம் திகதிக்குள் உலகெங்கிலும் 20 மில்லியனுக்கும் அதிகமான சினோபார்ம் அளவுகள் நிர்வகிக்கப்படுகின்றன.



சீஷெல்ஸ் ஜனாதிபதி, பஹ்ரைன் பிரதமர், ஜோர்தான் பிரதமர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர் மற்றும் பிரதமர், செர்பிய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள் இந்த தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை