Skip to main content

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் திரில் வெற்றி

Oct 14, 2020 202 views Posted By : YarlSri TV
Image

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் திரில் வெற்றி 

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.



அதன்படி பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஆர்சர் வீசினார். முதல் பந்தில் பிரித்வி ஷா க்ளீன் போல்டானார்.



அடுத்து வந்த ரகானே 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்தில் 57 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.



ஷ்ரேயாஸ் அய்யர் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்தது.



மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 ரன்களும், அலேக்ஸ் கேரி 14 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது.



ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்சர் 4 ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.



இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 



தொடக்கம் முதலே இரு வீரர்களும் அதிரடியாக ஆடினர். 9 பந்துகளை சந்திது 1 சிக்சர் 3 பவுண்டரிகள் உள்பட 22 ரன்கள் குவித்த பட்லர் நோர்ட்ஜீ பந்து வீச்சில் அவுட் ஆனார். 



அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 4 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த சஞ்சுவ் சாம்சங்குடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ் அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். 35 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த பென் ஸ்டோக்ஸ் துஷார் பந்து வீச்சில் வெளியேறினார்.



அடுத்து வந்த ராபின் உத்தப்பா, சஞ்சுவ் சாம்சங்குடன் சேர்ந்து அதிரடியாக விளையாடினார். 18 பந்துகளை சந்தித்த சஞ்சுவ் சாம்சங் 2 சிக்சர் உள்பட 25 ரன்னிலும், 27 பந்துகளை சந்தித்த உத்தப்பா 1 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 32 ரன் குவித்து வெளியேறினார். 



பின்னர் வந்த வீரர்கள் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.



18 பந்துகளை சந்தித்து 14 ரன்கள் எடுத்திருந்த ராகுல் தேவாட்டியா கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

8 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை