Skip to main content

நியூ கலிடோனியா தனி நாடாகச் செல்ல விரும்ப வில்லை மக்கள் முடிவு!

Oct 05, 2020 282 views Posted By : YarlSri TV
Image

நியூ கலிடோனியா தனி நாடாகச் செல்ல விரும்ப வில்லை மக்கள் முடிவு! 

பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட பகுதி நியூ கலிடோனியா எனும் சிறிய தீவு. 2017 ஆம் ஆண்டின் கணக்கெடுக்கின்படி 2 லட்சத்து 78 ஆயிரத்து 500 பேர் அங்கு வசிக்கிறார்கள். ஆட்சி மொழியாக பிரெஞ்சு இருக்கிறது. இங்கு கனக் எனும் சமூக மக்கள் வாழ்கிறார்கள்.



நியூ கலிடோனியா தனி நாடாகப் பிரிந்துச் செல்ல வேண்டும் என்று அங்கு போராட்டங்கள் நடக்கும். அதனால், பிரான்ஸிலிருந்து விலக விரும்புகிறீர்களா… அல்லது பிரான்ஸுடனே இருக்க விரும்புகிறீர்களா என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.



பரப்பரப்பாக நடந்த வாக்கெடுப்பில் 53.26 சதவிகித மக்கள் நியூகலிடோனியா தீவு பிரான்ஸுடனே சேர்ந்து இருக்கவேண்டும் என்று வாக்களிப்பின் மூலம் தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள்.



இதேபோல வாக்கெடுப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போது 56 சதவிகித மக்கள் பிரான்ஸுடன் சேர்ந்து இருக்க விரும்பும் முடிவை எடுத்தனர்.



மக்கள் அளித்திருக்கும் இந்த முடிவு குறித்து பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோ தனது மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தியுள்ளார்.



நியூ கலிடோனியா மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றம் அமைப்பு இருக்கிறது. அதில் பெரும்பான்மையோர், பிரிந்து செல்ல வேண்டுமா என்ற வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என நினைத்தால் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை