Skip to main content

மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது!

Sep 23, 2020 227 views Posted By : YarlSri TV
Image

மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது! 

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையை அடுத்த பிவண்டியில் ஜிலானி என்ற பெயரில் 3 மாடி கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 40 வீடுகளில் சுமார் 150 பேர் வசித்து வந்தனர்.



இதற்கிடையில், கடந்த திங்கள்கிழமை (நேற்றுமுன் தினம்) அதிகாலை 3.30 மணி அளவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.



அதிகாலை என்பதால் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோதே விபத்து காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.



கட்டிடம் இடிந்த விழும் சத்தம்கேட்டு எழுந்து வந்த அக்கம் பக்கத்தினர், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டனர். 



மேலும் தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த விபத்தால் கட்டிட இடிபாடுகளுக்கும் சிக்கிய 25 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



ஆனாலும், இந்த விபத்தில் நேற்று காலை நிலவரப்படி, 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தொடர்ந்து மீட்பு பணிகளும் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், தற்போது வரை கட்டிட விபத்தால் உயிரிழந்தவர்களில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால், பிவண்டியில் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பேரிடம் மீட்பு படையினர் தற்போது தெரிவித்துள்ளனர். 



மேலும், இன்னும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதால் அவர்களை உயிருடன் மீட்க தேவையான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.



இதற்கிடையில், மகாராஷ்டிரா கட்டிட விபத்திற்கு குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை