Skip to main content

உடல்நலம் குன்றியுள்ள ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

Aug 28, 2020 248 views Posted By : YarlSri TV
Image

உடல்நலம் குன்றியுள்ள ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்! 

உடல்நலம் குன்றியுள்ள ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:



எனது அன்பு நண்பர் சின்ஷோ அபே உடல்நலம் குன்றியுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. சமீபத்திய வருடங்களில், உங்களது அறிவார்ந்த தலைமையினாலும், தனிப்பட்ட ஈடுபாட்டினாலும் இந்திய – ஜப்பான் உறவானது முன் எப்போதையும் விட ஆழமாகவும் வலுவாகவும் வளர்ச்சி பெற்றது. நீங்கள் உடல் நலக்குறைவிலிருந்து விரைவாக மீள பிரார்த்திக்கிறேன்.



இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை