பிரபல பழம்பெரும் நடிகையின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
May 24, 2020 246 views Posted By : YarlSri TV
பிரபல பழம்பெரும் நடிகையின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
பிரபல பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. இவர் வசந்த மாளிகை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் அபிநய வெங்கடேஷ் கார்த்தி (வயது 36). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். இவர் பெங்களூருவில் தங்கியிருந்து அங்கு உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்கொரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் உள்ள வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் மன உளைச்சலில் அவர் தவித்து வந்தார்.
அவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் கிராமத்தில் சொந்தமாக பங்களா உள்ளது. அங்கு அவரது தந்தை கருணாகரன் மட்டும் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி அபிநய வெங்கடேஷ் கார்த்தி இ-பாஸ் பெற்று காரில் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஆனூர் கிராமத்துக்கு சென்றார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை பங்களாவின் பின்புறம் உள்ள ஓட்டு வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் அபிநய வெங்கடேசுக்கு ஏற்கனவே மன உளைச்சல் இருந்ததாகவும், மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும், தற்போது கொரோனா ஊரடங்கால் வெளியில் செல்ல முடியாததால் மன அழுத்தம் அதிகமானதாகவும் தெரியவந்தது. கொரோனா தொற்று பரவும் என்ற பயத்தால் பெங்களூருவில் இருந்து நேராக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க செல்வதை தவிர்த்து நேராக ஆனூர் கிராமத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்து சென்னைக்கு செல்வதாக முடிவு செய்திருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

ஐ.நா வெளியிட்டுள்ள சாதகமான அறிக்கை : இலங்கையில் உணவுப் பாதுகாப்பு.

இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்...


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1142 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1142 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1142 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1142 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1142 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1142 Days ago