Skip to main content

பா.ஜ.க கூட்டணிக்கு மீண்டும் திரும்பிய நிதிஷ்குமார்!

Jan 28, 2024 18 views Posted By : YarlSri TV
Image

பா.ஜ.க கூட்டணிக்கு மீண்டும் திரும்பிய நிதிஷ்குமார்! 

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா; பா.ஜ.க உடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க முடிவு; தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பியதற்கு பிரதமர் மோடி வாழ்த்து; இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம்



ஒருபுறம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து அழைப்பு, மறுபுறம் எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணியின் கண்டனம் என ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை அனைத்து அரசியல் வட்டாரங்களிலும் மையமாக இருந்தார், பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க, நிதிஷ் குமார் RJD மற்றும் காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொண்டு, ராஜினாமா செய்தார்.



(இந்தியா கூட்டணியுடன்) விஷயங்கள் சரியாக செயல்படவில்லை. நான் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்த அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். கட்சி தலைவர்கள் எனக்கு அறிவுரை கூறினர். அவர்கள் சொன்னதைக் கேட்டு ராஜினாமா செய்துவிட்டேன். நிலைமை நன்றாக இல்லை. எனவே, நாங்கள் உறவுகளை முறித்துக்கொண்டோம்,” என்று நிதிஷ் குமார் ராஜ் பவனுக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.



இந்த நடவடிக்கையை தொடர்ந்து, இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ள நிதிஷ்குமார், மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பியதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, ”பீகாரில் ஜே.டி(யு) மற்றும் பிற கட்சிகளுடன் சேர்ந்து என்.டி.ஏ ஆட்சி அமைக்கும் திட்டத்தை அனைத்து பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்களும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர். இது மாநிலத்தில் உள்ள மக்களின் நலனுக்கானது. சட்டமன்றக் கட்சித் தலைவராக சாம்ராட் சவுத்ரியும், துணைத் தலைவராக விஜய் சின்ஹாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்,” என்று கூறினார்.



இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் இது குறித்து சூசகமாக கூறியது இன்று உண்மையாகிவிட்டது. இந்த நாட்டில் நிறைய பேர் வந்து செல்கின்றனர்,” என்று கூறினார்.



சனிக்கிழமையன்று, நிதிஷ்குமாரை மல்லிகார்ஜூன் கார்கே இரண்டு அல்லது மூன்று முறை தொடர்பு கொள்ள முயன்றார், ஆனால் இருவரும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.



ஜெய்ராம் ரமேஷ், பீகார் முதல்வர் பச்சோந்தி போல நிறம் மாறிவிட்டார் என்றும், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக மம்தா பானர்ஜியும், காங்கிரஸும் இணைந்து போராடும் என்றும் கூறினார்.



இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத், “நிதிஷ் குமார் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவருக்கு மறதி பிரச்சனை. இது தான் உண்மை. அவர் சில நேரங்களில் தாக்குதலுக்கு ஆளாகிறார். தற்போது மீண்டும் நினைவாற்றலை இழந்துள்ளார். அவர் அதை மீண்டும் பெற்றவுடன், அவர் மீண்டும் இந்திய கூட்டணியில் இணைவார்,” என்று கூறினார்.



மேலும், “அயோத்தியில் ராமர் இருக்கிறார், பீகாரில் பல்து ராமர் இருக்கிறார். லாலுவுடன் நிதிஷ்குமார் கைகோர்த்தபோது பா.ஜ.க.,வும் அமித்ஷாவும் அவரை பல்து ராம் என்று அழைத்தனர். பா.ஜ.க.,வின் கதவுகள் நிதிஷ் குமாருக்கு மூடப்பட்டுள்ளன என்றும் அமித் ஷா கூறியிருந்தார். இப்போது என்ன நடந்தது?” என்றும் சஞ்சய் ராவத் கூறினார்.



ஆர்.ஜே.டி (79), காங்கிரஸ் (19), மற்றும் மூன்று இடதுசாரிக் கட்சிகள் (16) இணைந்து 114 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளனர், 243 பேர் கொண்ட அவையில் பெரும்பான்மைக்கு 8 பேர் குறைவாக உள்ளனர். மறுபுறம் ஜே.டி(யு) வின் 45 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பா.ஜ.க.,வின் 78 பேர் மற்றும் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.,வின் ஆதரவு, என மொத்தம் 124 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை