Skip to main content

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய நிதியமைச்சர்!

Jan 11, 2024 25 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய நிதியமைச்சர்! 

 இன்று (11) பிற்பகல் ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சிஇலங்கை வந்தடைந்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .



இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு.பிரமித பண்டார தென்னகோன் அவரை வரவேற்றுள்ளார்.



 கலந்துரையாடல்

அத்துடன், இந்த விஜயத்தின்போது ஜப்பானிய நிதியமைச்சர் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக கூறப்படுகின்றது .



மேலும் இலங்கையில் நாடாளுமன்றம், ஜயவர்தன மையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, கொழும்பு கப்பல்துறை மற்றும் மஹரகமவில் உள்ள லங்கா நிப்பான் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை