Skip to main content

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில்1

Aug 20, 2020 251 views Posted By : YarlSri TV
Image

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில்1 

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.



அலெக்ஸி நவால்னி சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் என்ற நகரத்திலிருந்து மொஸ்கோவுக்கு திரும்பும்போது, விமானத்தில் மயக்க அடைந்துள்ளார்.



அதன் பின்னர் விமானம் சைபீரியாவின், ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறங்கியதுடன், அங்குள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது உடலில் விசம் கலந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந் நிலையில் அவர் அருந்திய தேநீரில் விசம் கலக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.



44 வயதான நவால்னி , உயர் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு பிரசாரங்களுக்காகவும், ஜனாதிபதி விளாடிமிர் புடினை வெளிப்படையாக விமர்சிப்பதற்காகவும் அறியப்பட்டவர், கடந்த காலங்களில் உடல் ரீதியான தாக்குதல்களை சந்தித்தவர் ஆவார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை