Skip to main content

சென்னையை தொடர்ந்து ஆந்திராவையும் புரட்டி போட்ட MICHAUNG

Dec 06, 2023 33 views Posted By : YarlSri TV
Image

சென்னையை தொடர்ந்து ஆந்திராவையும் புரட்டி போட்ட MICHAUNG 

MICHAUNG சூறாவளி சென்னையில் இருந்து விலகி சென்று நேற்று ஆந்திர மாநிலம் சீராலா- பாபட்லா இடையே கரையை கடந்தது.



சூறாவளி கரையை கடந்த நேரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.



இந்நிலையில், சென்னையை தொடர்ந்து ஆந்திராவை MICHAUNG சூறாவளி தாக்கிய காட்சிகளும், விபரங்களும் வெளியாகியுள்ளன.



ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, நெல்லூர், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கோண சீமா, உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று காலையில் இருந்து 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்றுடன் மழை பெய்தது.



இதன் காரணமாக 100 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு மத்திய மற்றும் மாநில மீட்டு குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர்.



மேலும், 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



பலத்த காற்றின் காரணமாக 10 அடி உயரத்திற்கு மேல் அலை எழும்பி கடலோரத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.



குறிப்பாக ஆந்திரா-கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 63 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 876 மீனவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.



MICHAUNG சூறாவளியின் எதிரொலியால் ஆந்திராவில் 314 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



இதேவேளை, MICHAUNG சூறாவளி காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் சில பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.



மேலும் தண்டவாள வழித்தடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் இன்று புறநகர் மின்சார ரயில்கள் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற வீதத்தில் இயக்கப்படும் என சென்னை தெற்கு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை