Skip to main content

டேவிட் வார்னரின் இறுதி டெஸ்ட் போட்டி.. தேசிய கீதம் பாட மகள்களுடன் வந்த டேவிட் வார்னர்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்!

Jan 03, 2024 32 views Posted By : YarlSri TV
Image

டேவிட் வார்னரின் இறுதி டெஸ்ட் போட்டி.. தேசிய கீதம் பாட மகள்களுடன் வந்த டேவிட் வார்னர்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்! 

 பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தேசிய கீதம் பாடுவதற்காக தனது மகள்களுடன் டேவிட் வார்னர் 



 களமிறங்கியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.



 இந்த டெஸ்ட் போட்டியுடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெறுகிறார். ஆஸ்திரேலியா அணிக்காக இதுவரை 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 3 இரட்டை சதங்கள் உட்பட 26 சதங்கள், 36 சதங்கள் என்று மொத்தமாக 8,695 ரன்களை விளாசியுள்ளார்.



உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்த ஒருநாள் போட்டிகளிலும் விளையாடாத டேவிட் வார்னர், புத்தாண்டு அன்று ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். 



 உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தாலும், 37 வயதை எட்டியுள்ள டேவிட் வார்னரின் ஓய்வு முடிவு அவருக்கும் ஆஸ்திரேலியா அணியின் எதிர்காலத்திற்கும் ஏற்ப சரியான முடிவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சொந்த மண்ணில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார் டேவிட் வார்னர்.



இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தேசிய கீதம் பாடுவதற்காக மைதானம் வந்தனர். 



அப்போது ஆஸ்திரேலிய அணி வீரர்களை தொடக்க வீரர் டேவிட் வார்னர் வழிநடத்த, ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாகம் செய்தனர். அதுமட்டுமல்லாமல் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 3 மகள்களுடன் தேசிய கீதம் பாடுவதற்காக டேவிட் வார்னர் மைதானத்திற்கு வந்தார். 



 இது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்காக கடினமான சூழல்களிலும் களத்தில் போராடி பல்வேறு வெற்றிகளை பெற்று தந்த டெவிட் வார்னர், தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக களமிறங்கியதால் ஏராளமான ரசிகர்கள் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தனர். 



இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை