Skip to main content

குழந்தைகள் தொடர்பாக இலங்கையர்களுக்கு வைத்தியர் விடுத்த அவசர எச்சரிக்கை!

Feb 27, 2024 28 views Posted By : YarlSri TV
Image

குழந்தைகள் தொடர்பாக இலங்கையர்களுக்கு வைத்தியர் விடுத்த அவசர எச்சரிக்கை! 

நாட்டில் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அல்லது ஏனைய பானங்களை அருந்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவித்துள்ளார் .



 ஆரஞ்சு, இளநீர், தேங்காய் தண்ணீர், கஞ்சி, ஆரஞ்சு சூப் போன்ற பானங்களை அதிகளவில் பருகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



வயல்வெளிகளில் வேலை செய்பவர்கள், வீதிகளில் வேலை செய்பவர்கள், இராணுவத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் நீர்ச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படக்கூடியவர்கள் அதிகளவு தண்ணீர் அருந்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .



 குழந்தைகள் பாடசாலைக்கு செல்லும் போது இரண்டு போத்தல் தண்ணீர் கொண்டு செல்வது அவசியம் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.



ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது மிகவும் பொருத்தமானது என்றும் குழந்தைகளை தண்ணீரில் விளையாட நீண்ட நேரம் அனுமதிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர் தெரிவித்துள்ளார் 



இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், குழந்தைகளுக்கு வெப்ப அதிர்ச்சி ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிடுள்ளார் 



 குழந்தைகளை வாகனங்களில் நிறுத்திவிட்டு வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும்,வறட்சியான காலநிலையுடன் சரியான காற்றோட்டம் இன்மையினால், வாகனங்களில் வெப்பம் தாக்கி குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்றும் பெற்றோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை