Skip to main content

ஓ.பி.எஸ் உடன் கைகோர்க்குமா பா.ஜ.க?

Feb 12, 2024 52 views Posted By : YarlSri TV
Image

ஓ.பி.எஸ் உடன் கைகோர்க்குமா பா.ஜ.க? 

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை சென்னை வருகிறார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க உள்ளார்.



பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (பிப்.11) மாலை சென்னை வருகிறார். சென்னை துறைமுகத்தில் உள்ள மின்ட் தெருவில் நடைபெறும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். தொடர்ந்து தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது அ.தி.மு.கவில் இருந்து  நீக்கப்பட்ட  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசுகிறார். 



தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை  “என் மண், என் மக்கள்”  என்ற பெயரில் கடந்த 6 மாதங்களாக மாநிலம் முழுவதும் நடைபயணம் செய்து வருகிறார். சென்னையில் இன்று நடைபயணம் நடைபெற இருந்த நிலையில், அண்ணாமலை மற்றும் ஜே.பி.நட்டா இணைந்து ரோடு ஷோ நடத்த இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த நிகழ்ச்சிக்கு திமுக அரசு அனுமதி மறுத்துவிட்டதாக பா.ஜ.க குற்றஞ்சாட்டியது. 



தமிழகத்திலும் கூட்டணி குறித்து சலசலப்பு நிலவுகிறது. வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் கூறுகையில், கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்றார். 



இந்த கூட்டணியின் முன்னேற்றத்தைக் காண நட்டாவின் சென்னை பயணம் கவனத்தை ஈர்க்கும். 2019 தேர்தலில், காங்கிரஸும் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான கூட்டணி, மாநிலத்தில் உள்ள 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸும் திமுகவும் தங்கள் கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.



அ.தி.மு.கவில் ஒற்றை தலைமைய விவகாரம் வெடித்ததையடுத்து  ஓபிஎஸ் ஜூலை 2022-ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மே 2023-ல், அவரது மேல்முறையீட்டு மனுவையும்  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கொடி, கட்சிப் பெயர், தேர்தல் சின்னம் ஆகியவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு ஒதுக்கி உத்தரவிட்டது. 



தொடர்ந்து 2023 செப்டம்பரில், பா.ஜ.க தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதா அதிமுக அதிரடியாக அறிவித்தது. தமிழகத்திலும் கூட்டணியில் இல்லை என கூறியது. அண்ணாமலையின் செயல்பாடுகளே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. தொடர்ந்து பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் கூட பிரச்னைகளை தீர்க்க பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், அ.தி.மு.க., கோரியபடி, அண்ணாமலையை கட்டுப்பாட்டில் வைக்க பா.ஜ.க மூத்த தலைவர்கள் விருப்பம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை