Skip to main content

வருமானம் குறைந்த மாணவர்களின் அடைவுமட்டம் மிகவும் குறைவு!

Feb 06, 2024 17 views Posted By : YarlSri TV
Image

வருமானம் குறைந்த மாணவர்களின் அடைவுமட்டம் மிகவும் குறைவு!  

வடக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களின் அடைவுமட்டங்கள் மிகவும் குறைவாக இருப்பதாகவடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. 



வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டபத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தலைமையில் இன்று இடம்பெற்றது.



இதன்போது வன்னிமாவட்டங்களின் கல்வி நிலமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், அதில் ஏற்ப்படுத்தப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் 2018 தொடக்கம் 2022 வரை க.பொ.த.சாதாரண மற்றும் உயர்தரபரீட்சைகளில் வடக்குமாகாண மாணவர்களின் சித்திவிகிதங்கள் ஒப்பீடு செய்யப்பட்டதுடன்,  மாணவர்களின் அடைவுமட்டங்களை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் கருத்துரைகள் முன்வைக்கப்பட்டது. 



அத்துடன் வடக்குமாகாணத்தை பொறுத்தவரை வருமானம் குறைந்த மாணவர்களின் அடைவுமட்டங்களே மிகவும் குறைவாக காணப்படுகின்றது. எனவே அவர்களை இனம்கண்டு அந்த மாணவர்களின் அடைவுமட்டங்களை அதிகரிக்கவேண்டிய தேவை தொடர்பாக அறிவுறுத்தல்கள் விடுவிக்கப்பட்டது. 



நிகழ்வில் கிராமிய இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான்,  வடக்குமாகாண ஆளுனர் எஸ்.எம்.சாள்ஸ், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், கல்வி அமைச்சின்மேலதிக செயலாளர்  காயத்திரி அபேகுணசேகர, மற்றும்பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

7 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை