Skip to main content

மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்

Sep 29, 2023 24 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம் 

நாடு முழுவதிலும் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அனல் மின்சாரத்தைப் பெறுவதற்கு ஏற்படும் உற்பத்திச் செலவை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.



ஜனவரி மாத மின் கட்டணத்தை ஒக்டோபர் மாதம் திருத்தியமைக்க கோரிக்கை விடுத்ததாக மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.



இதன்படி மீண்டும் ஒருமுறை மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தினால் மின்சார உற்பத்திக்கு மேலதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர டி சில்வா தெரிவித்தார்.



இந்த ஆண்டு, 4,500 ஜிகாவாட் மணிநேர நீர்மின் திறன் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 3,750 ஜிகாவாட் மணிநேரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது என்று பொது மேலாளர் கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை