Skip to main content

நூறாண்டு கால வழக்கத்தை மாற்றிய உக்ரைன் நாடுதழுவிய ரீதியில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம்.

Dec 26, 2023 30 views Posted By : YarlSri TV
Image

நூறாண்டு கால வழக்கத்தை மாற்றிய உக்ரைன் நாடுதழுவிய ரீதியில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம். 

நூறு ஆண்டுகளாக பின்பற்றி வரும் வழக்கத்தினை மாற்றி உக்ரைனில் கிறிஸ்மஸ் இந்த ஆண்டு (2023) கொண்டாடப்படுகின்றது.



ரஷ்யாவுடன் நிகழும் போரின் மத்தியிலும் உக்ரைனில் இன்றைய தினம் (25) கிறிஸ்மஸ் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



உக்ரைன் மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பண்டிகை கொண்டாடுவது ரஷ்ய ஆர்த்தடக்ஸ் தேவாலயத்தின் வழிகாட்டுதலின்படியாகும்.



இதனால் உக்ரைனியர்கள் ரோமானிய கால ஜூலியன் கலண்டரின்படி ஜனவரி மாதம் 7 ஆம் திகதியன்று கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வந்தனர்.



இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது "சிறப்பு இராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது.



ஆனால், இதற்கு அடிபணியாத உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.



இரு தரப்பிலும் பலத்த உயிரிழப்புகள் மற்றும் உடமை சேதங்களுடன், 665 நாட்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



வ்வாறான சூழலில் தான் உலகம் முழுவதும் இன்று (25) கிறிஸ்மஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உக்ரைன் இது தொடர்பாக முக்கிய முடிவினை எடுத்தது.



அதன்படி, கடந்த ஜூலை மாதம் உக்ரைன் அரசு, ரஷ்யாவை எதிர்க்கும் விதமாக கிரிகோரியன் கலண்டரின்படி உலகம் முழுவதும் கொண்டாடும் டிசம்பர் 25 அன்றே கிறிஸ்மஸ் இனைக் கொண்டாட முடிவெடுத்தது.



சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கடைபிடித்து வந்த வழக்கத்தை மாற்றி முதன் முறையாக உக்ரைன் மக்கள் இன்று (25) கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றனர்.



ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னர், ரஷ்யாவை நினைவுபடுத்தும் தெருப்பெயர்களை நீக்குவதையும், அந்நாட்டுடன் தொடர்புள்ள புராதன கலைச்சின்னங்களை அகற்றுவதையும் உக்ரைன் தீவிரமாக செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை