Skip to main content

கைகளைத் தட்டுவதால் உடலுக்குக் கிடைக்கும் பயன்கள்...!

Aug 22, 2023 40 views Posted By : YarlSri TV
Image

கைகளைத் தட்டுவதால் உடலுக்குக் கிடைக்கும் பயன்கள்...! 

உள்ளங்கைகளையும், விரல்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து தட்டுவதால் மெரிடியன் புள்ளிகளில் தொடுதல் உணர்வு ஏற்படும். அதனால் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.



கைகளைத் தட்டினால் ஆரோக்கியம் மேம்படுமா...? ஆமாம். 30 வினாடிகள் கைகளைத் தட்டுவதன் மூலம் 10 மீட்டர் தூரம் ஓடுவதால் கிடைக்கும் பலன் நமக்கு கிடைக்கிறது.



நமது இரு கைகளிலும் தோராயமாக 340 மெரிடியன் புள்ளிகளும், 14 முழு உடல் உறுப்புகளுடன் இணைக்கப்பட்ட புள்ளிகளும் உள்ளன. கைகளைத் தட்டும்போது இந்த புள்ளிகள் தூண்டப்பட்டு, நமது ஆரோக்கியம் மேம்பட உதவியாக செயல்படுகின்றன.



நமது உள்ளங்கையில் வயிறு, கணையம், சிறுநீரகம், தொப்புள் மற்றும் பெருங்குடலுக்கான புள்ளிகளும், பெருவிரல் மற்றும் சுண்டுவிரல் நுனியில் பாதங்களுக்கான புள்ளிகளும், பெருவிரலின் கீழ் மூட்டு இணைப்பு பகுதியில் கல்லீரலுக்கான புள்ளிகளும், நடுவிரல் நுனியில் கண், மூக்கு, மூச்சுக்குழாய்க்கான புள்ளிகளும், விரலின் நடு மூட்டுப் பகுதியில் நுரையீரல் மற்றும் விரலின் கீழ் மூட்டுப் பகுதியில் இதயத்துக்கான புள்ளிகளும், ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் நுனியில் கைகள் மற்றும் மோதிர விரல் நடு மூட்டுப் பகுதியில் கண்களுக்கான புள்ளிகளும் அமைந்துள்ளன.



உள்ளங்கைகளையும், விரல்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து தட்டுவதால் மெரிடியன் புள்ளிகளில் தொடுதல் உணர்வு ஏற்படும். அதனால் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கைகளைத் தட்டும்போது தூண்டப்படும் மெரிடியன் புள்ளிகளால், குறைந்த ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை செரிமானக் கோளாறு, தலைவலி மற்றும் இதய நோய்கள் போன்றவை வராமல் தடுக்க முடியும்.



விரல் நுனியில் கண்கள் மற்றும் மூக்கு ஆகியவற்றுக்கான மெரிடியன் புள்ளிகள் உள்ளன. அவை கைத்தட்டலின்போது தூண்டப்பட்டு மூக்கில் ஏற்படும் நாசி அழற்சி, ரத்தப்போக்கு மற்றும் சைனஸ் பிரச்சினைகளை சீராக்குகின்றன. அத்துடன், மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவித்து, ஆஸ்துமா போன்ற சுவாசம் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகின்றன.



உள்ளங்கைகள், உடலின் உள் உறுப்புகளுடன் இணைக்கப்பட்ட மெரிடியன் புள்ளிகளைக் கொண்டுள்ளன. அவை, உடலின் உள் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், வாழ்வியல் நோய்களைக் கட்டுப்படுத்தவும் உதவி புரிகின்றன. பின் கைகளைப் பயன்படுத்தி கைகளைத் தட்டும்போது எலும்புகளின் நலம் மேம்பட்டு, முதுகு வலி மற்றும் இடுப்பு வலி குணமாகிறது.

 


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை