Skip to main content

திருப்பதி மலைப்பாதையில் சுற்றித்திரியும் வனவிலங்குகள்!-பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

Aug 21, 2023 46 views Posted By : YarlSri TV
Image

திருப்பதி மலைப்பாதையில் சுற்றித்திரியும் வனவிலங்குகள்!-பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை 

திருப்பதி மலைப்பாதையில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது



திருப்பதி மலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை ஆக நடந்து செல்ல பயன்படுத்தும் வழித்தடங்கள் அருகே இரவு நேரத்தில் தொடர்ந்து சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதை அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள ட்ராப் காமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள் உறுதி செய்துள்ளன.



கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதயாத்திரை சென்ற சிறுமியை சிறுத்தை அடித்து இழுத்து சென்றது. பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு சிறுமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இந்த நிலையில் நேற்று இரவு கரடி ஒன்று நடைபாதை அருகே நடமாடி கொண்டிருப்பதை பார்த்த வனத்துறையினர் அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். எனவே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை