Skip to main content

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் இரு மடங்கானது : வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள காரணம்

Aug 12, 2023 32 views Posted By : YarlSri TV
Image

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் இரு மடங்கானது : வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள காரணம் 

நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக காலி - கராப்பிட்டிய போதானா வைத்தியசாலையின் விசேட மனநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.



பொருளாதார பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள மனநல பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக, வைத்தியர்களை சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக விசேட மனநல வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.



மேலும், நாட்டில் தற்போது சிகிச்சைக்காக வரும் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 



பொருளாதார பிரச்சினை மற்றும் எதிர்காலம் தொடர்பான உத்தரவாதம் இன்மை போன்ற காரணங்களினாலேயே மனநல பாதிப்பு அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை