Skip to main content

வவுனியா மன்னார் வீதியில் இன்று(11) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்!

Oct 11, 2020 227 views Posted By : YarlSri TV
Image

வவுனியா மன்னார் வீதியில் இன்று(11) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்!  

வவுனியா மன்னார் வீதியில் இன்று(11) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.



10 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,



வவுனியா நகரில் இருந்து குருமன்காடு பகுதி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி காமினி பாடசாலைக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த போது திடீரென மறுபக்கம் சென்று திரும்ப முற்பட்ட போது மன்னார் வீதி வழியாக நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.



விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை