Skip to main content

முஹம்மது நபி தொடர்பில் சர்ச்சை பேச்சு! இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள சங்கட நிலை!

Jun 06, 2022 79 views Posted By : YarlSri TV
Image

முஹம்மது நபி தொடர்பில் சர்ச்சை பேச்சு! இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள சங்கட நிலை! 

முஹம்மது நபியைப் பற்றி சர்ச்சை



முஹம்மது நபியைப் பற்றி இந்திய ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால், கோபமடைந்த இஸ்லாமிய நாடுகளை சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.



இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, கடந்த மாதம் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் வெளியிட்ட கருத்தே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



முஹம்மது நபி தொடர்பில் சர்ச்சை பேச்சு! இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள சங்கட நிலை!



இந்திய- சவூதி அரேபிய தலைவர்கள்



இடைநிறுத்தம்



 



அதே நேரத்தில் கட்சியின் புதுடெல்லி பிரிவின் ஊடக பேச்சாளரான நவீன் ஜிண்டாலின் ட்விட் பதிவு ஒன்றும் சர்ச்சையை ஏற்படுத்தியது



இந்த கருத்துக்கள், இந்திய நாட்டின் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை கோபப்படுத்தியதுடன் சில மாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.



இதனையடுத்து பாரதீய ஜனதா கட்சி, நுபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்ததுடன் ஜிண்டாலை கட்சியில் இருந்து வெளியேற்றியுள்ளது.



முஹம்மது நபி தொடர்பில் சர்ச்சை பேச்சு! இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள சங்கட நிலை!



நுபுர் ஷர்மா



கட்சியின் நிலைப்பாடு



 



எந்தவொரு மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது.



எந்தவொரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் பாஜக எதிரானது என்று கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.



குவைத், கட்டார் மற்றும் ஈரான் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. சவூதி அரேபியாவும் இன்று தமது எதிர்ப்பை தெரிவித்தது.



இதில், இந்தியாவிடமிருந்து பகிரங்க மன்னிப்பை கட்டார் கோரியுள்ளது.



அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் நிலைப்பாடு



 



இந்த விவகாரத்தில் பாரதீய ஜனதாக் கட்சி மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைமைகள் பகிரங்க அறிக்கைகளை வெளியிட வேண்டியிருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



அப்படிச் செய்யாவிட்டால், அரபு நாடுகளுடனும் ஈரானுடனும் இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.



இந்தியாவும் இஸ்லாமிய நாடுகளும்



 



குவைத், கத்தார், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபையுடன் இந்தியாவின் வர்த்தகம் 2020-21ல் 87 பில்லியன் டொலராக இருந்தது.



அத்துடன் மில்லியன் கணக்கான இந்தியர்கள் இந்த நாடுகளில் வாழ்கிறார்கள் மற்றும் வேலை செய்கிறார்கள்



மற்றும் மில்லியன் கணக்கான டொலர்களை வீட்டிற்கு அனுப்புகிறார்கள்.



இந்தியாவின் எரிசக்தி இறக்குமதிக்கான முக்கிய ஆதாரமாகவும் இந்த நாடுகள் விளங்குகின்றன.  



முஹம்மது நபி தொடர்பில் சர்ச்சை பேச்சு! இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள சங்கட நிலை!


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை