Skip to main content

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு சரிவு!

Sep 23, 2022 72 views Posted By : YarlSri TV
Image

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு சரிவு! 

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.



இன்றைய வர்த்தக தொடக்கத்தில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 39 சதங்கள்; சரிந்து 81 ரூபாய் 18 சதங்களாக இருந்தது.



அமெரிக்க டொலர் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியதால் இந்திய ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.



அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம் அன்னிய செலாவணி சந்தையில் 79.96 ரூபாயாக முடிவடைந்தது. நேற்று சந்தையில் ரூபாய் மதிப்பு 80.27 ரூபாய் என்ற அளவில் தொடங்கியது. அது மேலும் வீழ்ச்சி அடைந்து 80.95 ரூபாய் அளவுக்கு சென்றது. இறுதியாகஇ 80.86 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது.



நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் இது 90 சதங்கள் அதிகம். ஒரே நாளில் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 சதங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது முன்எப்போதும் இல்லாத வீழ்ச்சி ஆகும்.



அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று கடன்களுக்கான வட்டி வீதத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இது மூன்றாவது உயர்வாகும்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை