Skip to main content

உலக நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் விடுத்த திடீர் எச்சரிக்கை!

Apr 01, 2022 77 views Posted By : YarlSri TV
Image

உலக நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் விடுத்த திடீர் எச்சரிக்கை! 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) உலக நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.



ரஷ்ய நாணயத்தில் எரிவாயு வாங்குவது தொடர்பாக உலக நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்றைய தினம் (31-03-2022) புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.



அதில் தங்களிடம் ரஷ்ய நாணயமான ரூபிளைக் கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார். இந்த நடவடிக்கை இன்று (01-04-2022) முதல் இது அமலுக்கு வருகிறது.



இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்படும், அவற்றின்மூலம் வெளிநாட்டு பணம், ரூபிளாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பில் புடின் குறிப்பிடுகையில், “யாரும் எங்களுக்கு இலவசமாக தரவில்லை. நாங்கள் தொண்டு செய்யவும் போவதில்லை. எனவே ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும்” என கூறி உள்ளார்.



ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவின் எரிவாயுவை பெரிய அளவில் நம்பி உள்ளன என தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை