Skip to main content

கறுப்பு சந்தையாக மாறிய கொழும்பு செட்டியார் தெரு? மத்திய வங்கி கடும் எச்சரிக்கை!

Mar 29, 2022 69 views Posted By : YarlSri TV
Image

கறுப்பு சந்தையாக மாறிய கொழும்பு செட்டியார் தெரு? மத்திய வங்கி கடும் எச்சரிக்கை! 

இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்படும் நாணய மாற்று நிலையங்களுக்கான அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படும் என இலங்கை மத்திய வங்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.



தற்போது இலங்கையின் டொலர் உள்ளிட்ட கறுப்பு சந்தை நடவடிக்கைகள் அதிகளவில் செட்டியார் தெரு பகுதியிலேயே அதிகளவில் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



குறிப்பாக நேற்றைய தினம் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, செட்டியார் தெருவின் ஒரு சில இடங்களில் 380 ரூபா முதல் 390 ரூபா வரை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



அதேவேளை மத்திய வங்கியின் இந்த அறிவிப்பை அடுத்து, செட்டியார் தெருவில் இன்றைய தினம் (29) டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 325 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.



அதேசமயம் ஒரு சில இடங்களில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 315 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை,இலங்கை வரலாற்றில்  24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 195,000 ரூபா முதல் 200,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை