Skip to main content

றம்புக்கண துப்பாக்கிச் சூடு- நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

May 03, 2022 63 views Posted By : YarlSri TV
Image

றம்புக்கண துப்பாக்கிச் சூடு- நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு! 

விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது சம்பவம் தொடர்பாக சரியாக விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேகாலை நீதவான் வாசனா நவரத்ன, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.



அத்துடன் றம்புக்கண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கேகாலை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் ஏனைய காவல்துறை அதிகாரிகள் மூன்று பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார்.



எரிபொருள் கிடைக்காதது சம்பந்தமான றம்புக்கணயில் நடைபெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது, காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.



இதன் போது முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உட்பட எனைய காவல்துறையினருக்கு பிணை வழங்கினால், விசாரணைகளுக்கு தடையேற்படக் கூடும் மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் எனக் கூறி, சந்தேக நபர்களை தொடர்ந்தும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.





அன்றைய தினம் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.



மேலும் நாட்டில் விசாரணைகளை நடத்தும் பலமான நிறுவனமான குற்றவியல் விசாரணை திணைக்களம் தொடர்பான மக்களுக்கு இருக்கும் கடும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதவான் அறிவித்துள்ளார்.



 



எரிபொருளை கோரி, றம்புக்கண கூட்டுறவு எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டத்துடன் சம்பந்தப்படாத 41 வயதான சமிந்த லக்சான் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொல்லப்பட்டார்.



மேலும் 13 பேர் காயமடைந்தனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை