Skip to main content

இம் மாத முடிவில் சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு இப்படி ஒரு நிலையா...

Mar 16, 2022 75 views Posted By : YarlSri TV
Image

இம் மாத முடிவில் சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு இப்படி ஒரு நிலையா... 

சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறுவனம் ஒன்று , இன்று செவ்வாய்க்கிழமை குறுகிய காலத்தில் தமது நிறுவனத்தில் இலங்கைக்கு பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு 5 கிலோஅரிசி இலவசம் என அறிவித்துள்ளமையின் பின்னணி தொடர்பாக மக்கள் விழிப்படைய வேண்டும்.



இதுவரையும் இங்குள்ள வார்த்தக நிலையங்களிலேயே 50 அல்லது 100 சுவிஸ் பிரங்குகளுக்கு மேல் பொருட்களை கொள்பனவு செய்பவர்களுக்கு 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வந்த நிலையில், அரச அனுமதி பெற்ற பணபரிமாற்ற நிதிநிறுவனம் ஒன்றின் இத்தகைய செயற்பாடானது பலகோணங்களில் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.



காரணம் கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சுவிஸ் பிராங்குக்கு 271 இலங்கை ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான ரூபாய்களை சுவிட்சர்லாந்தில் அரச அனுமதியுடன் இயங்கும் பணமாற்று நிறுவனங்கள் பதிவு செய்தது.



இந்த நிலையில்...



09ஆம் திகதி 271 CHF



10 ஆம் திகதி 284 CHF



11 ஆம் திகதி 285 CHF



14 ஆம் திகதி 308 CHF



இதுவரை அப்படி அதிகரிக்கப்படவில்லை, மாறாக சுவிஸ் பிராங்கின் நாணயப்பெறுமதி ரஸ்ய -உக்கிரைன் யுத்தத்தின் பின்னர் மேலும் அதிகரித்துள்ளது, இதனையும் கணக்கில் கொண்டால் ,சுவிஸ் பிராங்குக்கான ரூபாய் பெறுமதி மேலும் அதிகரிக்கப்படவேண்டும்.



இதன்படி ஒரு சுவிஸ் பிராங்குக்கு 335 இலங்கை ரூபாய்களுக்கும் அதிகமாகச் செல்ல வேண்டுமென்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. காரணம் சுவிட்சர்லாந்தில் பணப் பரிமாற்றல் சேவையில் உள்ள பலர் தாம் இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் நிலையான தொகையினை வழங்காமல் காலை, மதியம், மாலை என இலங்கை ரூபாயின் பெறுமதிகள் வேறுபடுகின்றன என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப் படும் பணத்தின் பெறுமதியை உள்ளுர் சந்தையிலே தீர்மானிக்கப் படுகின்றமையே இன் நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது, இம் மாத முடிவு - வருகின்ற மாத தொடக்கத்தில் ஒரு சுவிஸ் பிராங் 410 இலங்கை ரூபாய் வரை செல்லும் என ஓய்வு பெற்ற மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.



ஏனனில் இலங்கை மத்தியவங்கி 22.27 பில்லியன் ரூபாக்களை நேற்று திங்கட்கிழமை (14.03.2022 ) அச்சிட்டுள்ளதுடன் கடந்த வெள்ளிக்கிழமை (11.03.2022)18.7பில்லியனை அச்சிட்டிருந்தது. வெளிநாட்டு கையிருப்பு மத்தியவங்கியி்ல் ஸ்திரமாக இல்லாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



இலங்கை மத்திய வங்கியின் கீழ் உரிமம் பெற்ற பல முன்னணி வங்கிகள் அமெரிக்க டொலரை மிக அதிக அளவில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளன.



இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக சுவிஸ் பிராங், யூரோ, டொலர், பவுண்ட்ஸ் உட்பட அனைத்து நாணயங்களின் பெறுமதியும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.



இதனால் இம்மாத முடிவில் இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்தை யாரும் தடுக்க முடியாது என மேலும் அவர் குறிப்பிட்டார்.  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை