Skip to main content

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு- உயிரிழப்பு பதிவானது!

Jan 07, 2021 230 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு- உயிரிழப்பு பதிவானது! 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.



கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 60ஆயிரத்து 973பேர் பாதிக்கப்பட்டதோடு நான்காயிரத்து 100பேர் உயிரிழந்துள்ளனர்.



வைரஸ் தொற்று பரவியதிலிருந்து அமெரிக்காவில் பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.



உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை இரண்டு கோடியே 18இலட்சத்து 57ஆயிரத்து 616பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



அத்துடன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 69ஆயிரத்து 990பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.



தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 84இலட்சத்து 63ஆயிரத்து 484பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 29ஆயிரத்து 35பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



இதுதவிர ஒரு கோடியே 30இலட்சத்து 24ஆயிரத்து 142பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை