Skip to main content

நான்காவது பூஸ்டர் தடுப்பூசி - இஸ்ரேல் அரசு அனுமதி!

Dec 31, 2021 98 views Posted By : YarlSri TV
Image

நான்காவது பூஸ்டர் தடுப்பூசி - இஸ்ரேல் அரசு அனுமதி! 

இஸ்ரேலில் தற்போது 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர், இதில் 94 பேர் தீவிர நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இஸ்ரேலில்  8,243 பேர் இறந்துள்ளனர்.  இந்நிலையில், இஸ்ரேல் சுகாதாரத்துறை  அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் நாச்மன் ஆஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:



கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான நான்காவது தடுப்பூசியை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது.  தொற்று நோய் பரவல் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ​​



சூழலுக்கு ஏற்றவாறு நான்காவது பூஸ்டர் டோஸை பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். ஒரு வருடத்திற்கு முன்பு ஃபைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கிய முதல் வரிசை நாடுகளில் இஸ்ரேலும் இருந்தது.



கடந்த கோடை காலம் முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கத் தொடங்கியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்புகளை தடுக்கும் மாத்திரைகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை இஸ்ரேல் வியாழன் முதல் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை