Skip to main content

நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு திரும்பியது!

Dec 09, 2023 35 views Posted By : YarlSri TV
Image

நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு திரும்பியது! 

நாட்டின் பல பகுதிகளில் தற்போது மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.



இந்நிலையில், ஏனைய அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சார விநியோகத்தை மீள வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாவும் மின்சார சபை அறிவித்துள்ளது.



இன்று மாலை (டிசம்பர் 09) பிரதான மின் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு



நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.



மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.



மின் விநியோகத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சார சபை கூறியுள்ளது.



மின்சார சபையை தனியார்மயப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகின்றன.



இன்றைய பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல எம்.பிகள் மின்சார சபையை தனியார்மயப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்தனர்.



இதேவேளை, 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக 13 மணிநேர மின்வெட்டை இலங்கை மக்கள் எதிர்கொண்டனர்.



அந்நிய செலாவணி பற்றாக்குறையின் காரணமாக எரிபொருள் ஏற்றுமதியை உரிய காலப்பகுதியில் மேற்கொள்ள நிதியை செலுத்த இலங்கை தவறியதால் அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

6 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை