Skip to main content

தமிழகத்தில் மதுகடைகள் மூடல் உத்தரவை எதிர்த்து தமிழக அரசினால் கோரப்பட்ட மனுதாக்கல் இன்று விசாரனை....!

May 12, 2020 345 views Posted By : YarlSri TV
Image

தமிழகத்தில் மதுகடைகள் மூடல் உத்தரவை எதிர்த்து தமிழக அரசினால் கோரப்பட்ட மனுதாக்கல் இன்று விசாரனை....! 

டெல்லி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. கொரோனா பரவல் தடுப்புக்காக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. சென்னையில் உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.



இருப்பினும் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனிடையே மதுபான விற்பனையின் போது, எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என நேற்று அவசர வழக்கு தொடரப்பட்டது. மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவில்லை. மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு எடுக்க இயலாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பிழையை சரி செய்து மீண்டும் மனுத்தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை