Skip to main content

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல்!

Aug 14, 2021 78 views Posted By : YarlSri TV
Image

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல்! 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தபிறகு, ஜூன் 21-ந்தேதி சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. அதன்பின்னர் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.  மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 



இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு, பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. முழுக்க முழுக்க இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.



கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று, தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். 



இந்த பட்ஜெட்டில் வேளாண் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை போன்றவற்றில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள்,  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.



இ-பட்ஜெட் என்பதால் அமைச்சர்  பட்ஜெட்டை வாசிக்கும்போது, அந்த வாசகங்கள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரை மூலம் ஓடுகிறது. அதன்மூலம் பட்ஜெட் தொகுப்பை எம்எல்ஏக்கள் கவனித்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை