Skip to main content

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!...

Nov 06, 2023 37 views Posted By : YarlSri TV
Image

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!... 

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், இம்மாதம் 19 அல்லது 26 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் அனுமதி வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.



கடந்த ஆண்டு விஜயதசமியை முன்னிட்டு, தமிழகத்தில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அனுமதி கோரியது. ஆனால், இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதில், உச்ச நீதிமன்றமும் சில நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது. இதன் பிறகு தமிழகம் முழுவதும் ஊர்வலம் நடந்தது.



இந்த நிலையில், இந்த ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு, தமிழகத்தில் அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 33 இடங்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே விதித்த நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்தலாம் என்று கடந்த அக்டோபர் 16-ம் தேதி அனுமதி வழங்கியது.



ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரணி எங்கு தொடங்கி எங்கு முடியும் என்பது குறித்த தகவல்களை வரும் 9-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி,. நவம்பர் 19 அல்லது 26 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார் .


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை