Skip to main content

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 5.5 கோடி தடுப்பூசி - அமெரிக்கா தாராள உதவி!

Jun 23, 2021 168 views Posted By : YarlSri TV
Image

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 5.5 கோடி தடுப்பூசி - அமெரிக்கா தாராள உதவி! 

கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார நாடான அமெரிக்கா 5.5 கோடி டோஸ் தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.



இதில் ஆசிய நாடுகளுக்கு மட்டும் 1 கோடியே 60 லட்சம் தடுப்பூசிகளை அளிக்கிறது. இதில் ஒரு பங்கு இந்தியாவுக்கு கிடைக்கும்.



ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் 2.5 கோடி தடுப்பூசிகளை வழங்குவதற்கான திட்டம் பற்றி ஜோ பைடன் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து, அவற்றை அனுப்பி வைக்கவும் தொடங்கி உள்ளது.



ஆசிய நாடுகளுக்கான 1 கோடியே 60 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, பூடான் உள்ளிட்ட 18 நாடுகளுக்கு தருகிறது.



நேற்று முன்தினம் இது தொடர்பான தகவல்களை வாஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்டாலும், அதில் எந்த நாட்டுக்கு எத்தனை தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படும் என்பதைப்பற்றிய தகவல்கள் இல்லை.



இது பற்றிய வெள்ளை மாளிகை அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 8 கோடி தடுப்பூசிகளை நன்கொடையாக இந்த மாத இறுதிக்குள் வழங்குவதாக உறுதிபட கூறப்பட்டுள்ளது.



இந்த 8 கோடி தடுப்பூசியில் பெருமளவு (75 சதவீதம்), உலக சுகாதார அமைப்பு மற்றும் அதன் கூட்டாளி அமைப்புகளின் கோவேக்ஸ் என்ற உலகளாவிய திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் என கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.



அமெரிக்கா வழங்கும் தடுப்பூசிகளின் பட்டியலில் மாடர்னா, பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள் அடங்கி உள்ளன. அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி இன்னும் அமெரிக்க நிர்வாகத்தால் அனுமதிக்கபடவில்லை.



இங்கிலாந்தில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டின்போது, பைசர் நிறுவனத்தின் 50 கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா வாங்கி குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் வழங்க இருப்பதாக அறிவித்தது நினைவுகூரத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை