Skip to main content

கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என தி.மு.க. தொண்டர்களுக்கு, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Jun 12, 2020 251 views Posted By : YarlSri TV
Image

கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என தி.மு.க. தொண்டர்களுக்கு, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு விடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன், மக்கள் பணிக்குத் தன் இன்னுயிர் தந்து நம் கண்களைக் கடலாக்கி, நெஞ்சத்து வானத்தில் என்றும் மறையாத சூரியனாகச் சுடரொளி வீசிக் கொண்டிருக்கிறார். ஊரடங்கால், வாழ்வாதாரங்களை இழந்து தவித்த ஏழை மக்களின் பசித்துயர் போக்கிட தி.மு.க. களமிறங்கிச் செயலாற்றியது.உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருந்த போதும், ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளின் காரணமாக நோய்த் தொற்று ஏற்பட்டு, ஜூன் 2-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடும் உயிர்ப் போராட்டம் நடத்தினார். ஆனாலும் நம் எல்லோரையும் விட்டுப் பிரிந்துவிட்டார். ஒரு பேரிடர் நேரத்தில், தன்னைப் பற்றியோ தனது உடல் நலன் பற்றியோ கவலைப்படாமல், களத்தில் நின்ற மாவீரனாக மக்கள் மனதில் நெடிதுயர்ந்து வாழ்கிறார். தியாக சுடராக, அவரது குடும்பத்தில் மட்டுமல்ல கட்சியினர் இல்லங்களில் எல்லாம் ஒளி விடுகிறார்.நெருக்கடிகள், இடர்ப்பாடுகள், சூறாவளிகள், சுனாமிகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு நிலைத்திருக்கும் இந்த இயக்கத்தின் அடித்தளமே ஜெ.அன்பழகன் போன்ற செயல்வீரர்கள்தான். பிறந்தநாளிலேயே மரணம் எய்திய அவர், பல உடன்பிறப்புகளின் மனதில் புதிய வலிமையை ஊட்டியிருப்பதைக் காண்கிறேன். அவர்களின் உணர்வில், ஜெ.அன்பழகனை உயிர்ப்புடன் காண்கிறேன்.ஒவ்வொரு கட்சி தொண்டரும் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குகின்ற அதேவேளையில், மக்களுக்கான நம் பணியினைத் தொடரும்போது, இந்த நோய்த்தொற்று காலத்தில் மிகுந்த பாதுகாப்புடன் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும் எனப் பணிவுடன் வேண்டுகிறேன். மக்களுக்கான தியாக இயக்கம் தி.மு.க. என மரண சாசனம் எழுதிச் சென்றிருக்கும் மாவீரன் ஜெ.அன்பழகனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை