Skip to main content

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி கொள்கலன் பிரதமரிடம் கையளிப்பு!

Dec 04, 2020 197 views Posted By : YarlSri TV
Image

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி கொள்கலன் பிரதமரிடம் கையளிப்பு! 

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற் தூரிகைகளை பாதுகாப்பாக மீள்சுழற்சி செய்வதற்கு, சுற்றாடத் துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மீள்சுழற்சி கொள்கலன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.



நாடாமாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து, குறித்த கொள்கலன் சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.



இந்த சுற்றாடல் பாதுகாப்பு சார்ந்த திட்டத்தை நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள் மற்றும் நிறுவன மட்டத்தில் செயற்படுத்துவது காலத்தின் தேவையாகும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.



சுமார் 80 கிலோகிராம் கார்பன் பேனாக் குழாய்கள், நாளாந்தம் நாட்டின் பாடசாலை அமைப்பின் ஊடாக மாத்திரம் ஒதுக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.



அறிமுகப்படுத்தப்பட்டுளள புதிய கொள்கலனில், பயன்பாட்டின் பின்னர் ஒதுக்கப்படும் 3000 கார்பன் பேனா குழாய்கள் மற்றும் 500 பற்தூரிகைகளை இட முடியும் என, அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



அத்துடன், குறித்த கொள்கலன்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை